< Back
மாநில செய்திகள்
விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
16 July 2022 12:10 AM IST

ஆம்பூர் வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது

ஆம்பூர்

ஆம்பூர் அருகே நாயக்கனேரி ஊராட்சிக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஆம்பூர் வனத்துறை அதிகாரிகள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தீர்க்க சுனை அருகே சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் தீர்க்க சுனை பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (வயது 25), காமராஜ் (24) என்பதும், வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 1 நாட்டு துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும் டார்ச் லைட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்