விழுப்புரம்
சாராயம் கடத்திய 2 பேர் கைது
|பிரம்மதேசம் அருகே சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிரம்மதேசம்
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டின் சிறப்பு தனிப்படை போலீசார் பிரம்மதேசம் அருகே உள்ள உலகாபுரம் பஸ் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அந்தவழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 40 பாக்கெட் புதுச்சேரி சாராயம் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் கீழ்பூதேரி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயசீலன்(வயது 50) என்பதும், புதுச்சேரியில் இருந்து சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ஜெயசீலனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சாராயபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் பிரம்மதேசம் பஸ் நிலையம் அருகே பாட்டில்களில் புதுச்சேரி சாராயத்தை கடத்தி வந்த செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா வெடால் கிராமத்தை சேர்ந்த பூபாலன்(42) என்பவரை கைது செய்த போலீசார் இவரிடம் இருந்து 40 சாராய பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.