< Back
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
திண்டுக்கல்
மாநில செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
20 Dec 2022 10:27 PM IST

சாணார்பட்டி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாணார்பட்டி அருகே சிலுவத்தூர் பகுதியில் ஐ.ஜி. தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அதே ஊரை சேர்ந்த சவுந்தரம் (வயது 48), கொசவபட்டியை சேர்ந்த ஆரோக்கியதாஸ் (34) ஆகியோர் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் தனிப்படை போலீசார் பிடித்து, சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தரம், ஆரோக்கியதாசை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 187 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்