< Back
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
வேலூர்
மாநில செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
5 July 2023 12:24 AM IST

காட்பாடியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

காட்பாடி போலீசார் தாராபடவேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடை உரிமையாளர் அரவிந்தன் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் விரிஞ்சிபுரம் போலீசார் ரோந்து செல்லும்போது செதுவாலை கிராமத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக சக்கரவர்த்தி (61) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்