< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
பஸ் நிலையம் அருகே மது விற்ற 2 பேர் கைது - 86 பாட்டில்கள் பறிமுதல்
|21 March 2023 2:41 PM IST
பள்ளிப்பட்டு பஸ் நிலையம் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 86 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பள்ளிப்பட்டு பஸ் நிலையம் அருகே அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடைக்கு சற்று தொலைவில் சில ஆசாமிகள் அரசு மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு குழுவினர் நேற்று அங்கு திடீரென்று சோதனை நடத்தினர். அப்போது மது பாட்டில்களை அதிக விலைக்கு 2 பேர் விற்பனை செய்வது தெரிய வந்தது. போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 86 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருச்சி அம்பாள் நகரை சேர்ந்த சண்முகம் (வயது 53), மற்றொருவர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா பண்ணா வயல் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (23) என்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு திருத்தணி சிறையில் அடைக்கப்பட்டனர்.