< Back
மாநில செய்திகள்
தக்கலை அருகேமதுவிற்ற 2 பேர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தக்கலை அருகேமதுவிற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
4 July 2023 12:45 AM IST

தக்கலை அருகேமதுவிற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தக்கலை:

தக்கலை அருகே உள்ள சாமியார்மடம் பகுதியில் தக்கலை போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புதுக்கடை பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 43) மற்றும் திருவிதாங்கோட்டை சேர்ந்த ஸ்டெட் மென் (46) என்பதும், மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 81 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1880 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்