< Back
மாநில செய்திகள்
சாராயம் விற்ற 2 பேர் கைது
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

சாராயம் விற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
31 Dec 2022 5:54 PM IST

ஆம்பூர் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது மளிகை தோப்பு பகுதியில் இருந்த சிலர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அதில் அதே பகுதியை சேர்ந்த சுந்தர் (வயது 42), ஆம்பூர் பி.கஸ்பா பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (64) என்பதும் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர், ஜெயசீலன் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்