< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
சாராயம் விற்ற 2 பேர் கைது
|8 Aug 2023 12:19 AM IST
சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேப்பந்தட்டை:
சாராயம் விற்பனை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள மலையாளபட்டி பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் மலையாளபட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கொட்டாரக்குன்று கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 45) என்பவர் அந்த பகுதியில் பாக்கெட் சாராயம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர்.
கைது
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கொட்டாரக்குன்று கிராமத்தை சேர்ந்த தங்கராசு (48) என்பவர், அவரது வீட்டின் அருகே 60 லிட்டர் சாராய ஊறல் போட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து தங்கராசுவையும் போலீசார் கைது செய்து, சாராய ஊறலை அழித்தனர்.