< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரத்தில் குட்கா பொருட்கள் விற்ற 2 பேர் கைது
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரத்தில் குட்கா பொருட்கள் விற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
2 May 2023 3:05 PM IST

காஞ்சீபுரத்தில் குட்கா பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்தனர்.

காஞ்சீபுரத்தில் உள்ள சிவகாஞ்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சிவகாஞ்சி போலீசார் அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து ஏகாம்பரபுரம் தெருவைச்சேர்ந்த ஜெயபால் (வயது57), செங்கழுநீரோடை தெருவைச்சேர்ந்த முருகன் (51) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்