< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
மது விற்ற 2 பேர் கைது
|9 Oct 2022 12:20 AM IST
மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குளித்தலை அருகே உள்ள தண்ணீர் பள்ளி மற்றும் கோட்டமேடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் தண்ணீர்பள்ளி கல்லுபாலம் அருகே மதுவிற்ற தண்ணீர்பள்ளி புத்துக்கோயில் தெருவை சேர்ந்த பொன்னர் (வயது 52) என்பவரை கைது செய்தனர். இதேபோல கோட்டமேடு பகுதியில் தனது வீட்டின் பின்புறம் வைத்து மதுவிற்ற சிவானந்தம் (54) என்பவரையும் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து மொத்தம் 11 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.