< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
மது விற்ற 2 பேர் கைது
|10 Oct 2023 3:34 AM IST
தஞ்சை அருகே மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்;
தஞ்சை விளார் ரோடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் விளார் ரோடு மாரிக்குளம் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் பிரபாகரன்(வயது 32), நாஞ்சிக்கோட்டை ரோடு முனியாண்டவர் காலனி பகுதியை சேர்ந்த சண்முகவேல் மகன் மணிவண்ணன்(35) என்பதும், இவர்கள் மது விற்றதும் தெரியவந்தது. இது குறித்து தஞ்சை தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.