< Back
மாநில செய்திகள்
அனுமதியின்றி ஏரியில் கிராவல் மண் அள்ளிய 2 பேர் கைது
பெரம்பலூர்
மாநில செய்திகள்

அனுமதியின்றி ஏரியில் கிராவல் மண் அள்ளிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
9 Aug 2023 12:32 AM IST

அனுமதியின்றி ஏரியில் கிராவல் மண் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் பகுதியில் உள்ள ஏரிகளில் சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அரும்பாவூர் ஏரியில் டிராக்டரில் கிராவல் மண் அள்ளிக்கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள், அ.மேட்டூரை சேர்ந்த ஹரிஹரன் (வயது 32), அரும்பாவூரை சேர்ந்த அருண் (31) என்பதும், அனுமதியின்றி மண் அள்ளியதும் தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்