< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
மதுரை பேரையூரில் மதுபாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் கைது
|3 Oct 2023 2:49 AM IST
மதுரை பேரையூரில் மதுபாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேரையூர்,
மதுரை பேரையூர், சேடப்பட்டி, போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக ரோந்து சென்றனர். அப்போது கே.ஆண்டிபட்டியை சேர்ந்த பழனி (வயது 65) என்பவர் விற்பனை செய்வதற்காக 9 மதுபாட்டில்கள் வைத்திருந்தபோது ரோந்து சென்ற போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இதேபோல் சிலைமலைபட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (43) என்பவரிடமிருந்து 8 மதுபாட்டில்களை பேரையூர் போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.