< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
வெடி மருந்து வைத்திருந்த 2 பேர் கைது
|22 Aug 2023 12:15 AM IST
போடி அருகே வெடி மருந்து வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போடி தாலுகா போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி விலக்கில் கையில் பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து பையை சோதனை செய்தனர். அதில், வெடி மருந்து நிரப்பப்பட்ட பாட்டில்கள் இருந்தன. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், போடி புதூர் போயன்துறை ரோட்டைச் சேர்ந்த சடையன் (வயது 44) என்பது தெரியவந்தது. பின்னர் அவரிடம் வெடி மருந்து தங்களிடம் எப்படி வந்தது என்று போலீசார் கேட்டனர். அப்போது அணைக்கரைப்பட்டியை சேர்ந்த ராமு என்பவர் தன்னிடம் தந்ததாக அவர் கூறினார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.