< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
மறைமலைநகர் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது
|25 July 2022 4:45 PM IST
மறைமலைநகர் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சிங்காரவேலன் தெரு டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்த போது அங்கு திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த தேவகோட்டை பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (வயது 23), முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த குமரன் (35) இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 28 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.