< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
கண்மாயில் அனுமதி இன்றி மண் அள்ளிய 2 பேர் கைது
|8 Sept 2023 12:15 AM IST
சிவகிரி அருகே கண்மாயில் அனுமதி இன்றி மண் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகிரி:
சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் தலைமையில் போலீசார் சிவகிரி அருகே தென்மலை, அருகன்குளம், செந்தட்டியாபுரம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அருகன்குளம் கண்மாய் பகுதியில் அனுமதி இன்றி பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை அள்ளி டிராக்டரில் ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பொக்லைன் ஆபரேட்டர் சங்கரன்கோவில் தாலுகா பந்தப்புளி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பரமசிவம் (வயது 38), டிராக்டர் டிரைவர் அருகன்குளம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வைரமுத்து (46) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் பொக்லைன் எந்திரமும், டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.