< Back
மாநில செய்திகள்
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது
அரியலூர்
மாநில செய்திகள்

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
20 Oct 2023 1:02 AM IST

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் ஆண்டிமடம் விளந்தை பகுதியில் சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியான தண்டபாணி வழக்கம்போல் பூஜை நடத்தி விட்டு கோவிலை பூட்டி சென்று விட்டார். பின்னர் மீண்டும் மாலையில் நடை திறக்க வந்த போது கோவிலின் பின்பக்க கேட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்து ஆயிரம் ரூபாயை திருடி சென்றனர். இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அழகாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த வீராசாமி (வயது 32), மணிகண்டன் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்