< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு
|13 July 2023 3:12 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட இருவரையும் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களான வெண்குடி கிராமத்தை சேர்ந்த கலையரசி (வயது 50) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலைய குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட மண்ணூர் கிராமத்தை சேர்ந்த பாலச்சந்தர் (37) ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.சுதாகர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று கொண்ட காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், கலயரசி, பாலச்சந்தர் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.