< Back
மாநில செய்திகள்
சாலை விபத்தில் 2 பேர் படுகாயம்
கரூர்
மாநில செய்திகள்

சாலை விபத்தில் 2 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
25 Oct 2023 11:31 PM IST

சாலை விபத்தில் சிக்கிய 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

புன்னம் சத்திரம் அருகே உள்ள பழமாபுரம் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 47). கூலி தொழிலாளி இவர், தனது மோட்டார் சைக்கிளில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே தஞ்சாவூர் பழைய நெல்லுமண்டித்தெருவை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிவக்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் கரூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சிவக்குமார் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் புருஷோத்தமன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்