< Back
மாநில செய்திகள்
குமரியில் வெவ்வேறு சம்பவம்:பெண் உள்பட 2 பேர் தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குமரியில் வெவ்வேறு சம்பவம்:பெண் உள்பட 2 பேர் தற்கொலை

தினத்தந்தி
|
28 Aug 2023 10:33 PM IST

குமரியில் ெவவ்ேவறு சம்பவங்களில் ெபண் உள்பட 2 ேபர் தற்ெகாைல ெசய்து ெகாண்டனர்.

ராஜாக்கமங்கலம்:

கருங்கல் அருகே இலவுவிளை மஞ்சனாவிளை பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி தங்க புஷ்பம் (வயது 53). சம்பவத்தன்று இவர் தன்னுடைய உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த கருங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தங்க புஷ்பம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து பால்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் ராஜாக்கமங்கலம் பகுதியிலும் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதன் விவரம் வருமாறு:-

ராஜாக்கமங்கலம் அருகே பரமன்விளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 49), தொழிலாளி. சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் இருந்த போது மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். இதனால் மயங்கி கீழே விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம்? குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்த கண்ணனுக்கு மனைவியும், கல்லூரியில் படித்து வரும் ஒரு மகளும் உள்ளனர்.

---

மேலும் செய்திகள்