< Back
மாநில செய்திகள்
வாலிபரை கொல்ல முயன்ற ரவுடி உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கடலூர்
மாநில செய்திகள்

வாலிபரை கொல்ல முயன்ற ரவுடி உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
10 Aug 2023 1:39 AM IST

சேத்தியாத்தோப்பு அருகே வாலிபரை கொலை செய்ய முயன்ற ரவுடி உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கொலை முயற்சி

சேத்தியாத்தோப்பு அடுத்த பண்ணப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி மணி(வயது 35). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஜோசப் மகன் ரவுடி லோகு என்கிற லோகநாதனுக்கும்(28) உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 14-ந்தேதி இரவு கொளஞ்சிமணி பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜோசப் மகன்கள் தமிழரசன்(27), லோகநாதன் மற்றும் ஜெயாந்தன், அபிஷ், பிரவீன், டைகர் என்கிற சதீஷ், தவுல்ராஜ் ஆகியோர் கொளஞ்சிமணியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். இதுதொடர்பாக ஒரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசன் உள்பட 7 பேரையும் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது

இந்த நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய தமிழரசன், லோகநாதன் ஆகியோரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும்பொருட்டு அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின்பேரில் அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல் கடலூர் மத்திய சிறையில் அவர்களுக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்