< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
கஞ்சா விற்றவர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|4 Sept 2022 1:12 AM IST
கஞ்சா விற்றவர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் ஜிகர்தண்டா கடை ஊழியர் ஒருவரிடம் கத்தியை காண்பித்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஹரிபிரசாத் (வயது 22) என்பவர் காந்திமார்க்கெட் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுபோல் கஞ்சா விற்ற வழக்கில் ஆனந்த் (30) என்பவரை எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்தனர். இவர்களில் ஹரிபிரசாத் மீது திருட்டு வழக்கு, வழிப்பறி வழக்கு, கொலைவழக்கு என 8 வழக்குகளும், ஆனந்த் மீது சில்லறையில் மதுவிற்பனை செய்த வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.