< Back
மாநில செய்திகள்
போதை மாத்திரைகள் விற்ற என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது
திருச்சி
மாநில செய்திகள்

போதை மாத்திரைகள் விற்ற என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது

தினத்தந்தி
|
16 Oct 2023 2:04 AM IST

போதை மாத்திரைகள் விற்ற என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொன்மலைப்பட்டி:

என்ஜினீயர்

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள கொக்கரசன்பேட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு விசாரணை நடத்தினர்.

இதில் காட்டூர் அண்ணா நகர் கொடிமர தெருவை சேர்ந்த ஜாபர் அலி மகன் ஆஷிக் (வயது 24), காட்டூர் போஸ் தெருவை சேர்ந்த முகமது ரபிக் மகன் முகமது ஹர்ஷத் (23) ஆகியோர் போதை மாத்திரைகள் வைத்து விற்றதும், இதில் முகமது ஹர்ஷத் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் பட்டதாரி என்பதும், ஆஷிக் டிப்ளமோ படித்துள்ளதும் தெரியவந்தது.

கைது

இதையடுத்து அவர்களை தனிப்படை போலீசார் பிடித்து, திருவெறும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து பத்து அட்டை போதை மாத்திரைகள், 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்