விழுப்புரம்
மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது
|மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
மரக்காணம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ரெங்கநாதபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து மரக்காணம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த 2 பைகளில் 150 குவாட்டர் மது பாட்டில்கள் இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த பெண் உள்பட 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். விசாரணையில், மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவர் புதுவை பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 45), அவருடன் வந்த பெண், மரக்காணம் சிறுவாடி கிராமத்தை சேர்ந்த கண்ணன் மனைவி சிவரஞ்சனி (39) என்பதும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.