கடலூர்
சேத்தியாத்தோப்பு, கம்மாபுரத்தில் மின்னல் தாக்கி பெண் உள்பட 2 பேர் பலி
|சேத்தியாத்தோப்பு, கம்மாபுரத்தில் மின்னல் தாக்கி பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
சேத்தியாத்தோப்பு,
மின்னல் தாக்கியது
சேத்தியாத்தோப்பு அடுத்த முடிகண்டநல்லூர் ஊராட்சி சாந்தி நகர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி(வயது 53). இவர் நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள புளியமரத்தின் கீழ் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் ரவி சம்பவம் இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அருகில் இருந்த அவரது தாயார் விசாலமும் காயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சோழத்தரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
கம்மாபுரம் அடுத்த கத்தாழை கிராமத்தை சேர்ந்தவர் ராதா மனைவி தனம்(50). இவர் நேற்று கத்தாழை பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் தனம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குதிரை செத்தது
இதனிடையே புவனகிரியில் பெய்த மழையின்போது மின்னல் தாக்கி புவனகிரி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த குப்புசாமி என்பவருக்கு சொந்தமான குதிரையும் பரிதாபமாக செத்தது.