< Back
மாநில செய்திகள்
கூட்டுறவு துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.74 லட்சம் மோசடி பெண் உள்பட 2 பேர் கைது
சென்னை
மாநில செய்திகள்

கூட்டுறவு துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.74 லட்சம் மோசடி பெண் உள்பட 2 பேர் கைது

தினத்தந்தி
|
27 July 2023 1:29 PM IST

கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆவடி,

சென்னை மாதவரம் மில்க் காலனி மூலச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவருக்கு 3 மகள்கள். முத்துசாமியிடம் அம்பத்தூர் பச்சையப்பன் மெயின் ரோட்டை சேர்ந்த சத்ய நாராயணன் என்பவர் உங்கள் மகள்களுக்கு கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பி ரூ.33 லட்சம் வரை சத்யநாராயணனிடம் கொடுத்தார்.

ஆனால் சொன்னபடி வேலை வாங்கி தராமல் தலைமறைவாகி விட்டார். இது குறித்த புகாரின்பேரின் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் சத்யநாராயணன், முத்துசாமியின் மகள்கள் உள்பட 9 பேரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.74 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரிந்தது.

இதையடுத்து சத்ய நாராயணனின் மனைவி ஷாலினி (வயது 33) மற்றும் தாமஸ் (29) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்