< Back
மாநில செய்திகள்
கோயம்பேட்டில் காற்றாடி மாஞ்சா நூல் அறுத்து பெண் என்ஜினீயர் உள்பட 2 பேர் காயம் - பள்ளி மாணவன் கைது
சென்னை
மாநில செய்திகள்

கோயம்பேட்டில் காற்றாடி மாஞ்சா நூல் அறுத்து பெண் என்ஜினீயர் உள்பட 2 பேர் காயம் - பள்ளி மாணவன் கைது

தினத்தந்தி
|
16 March 2023 10:27 AM IST

கோயம்பேட்டில் காற்றாடி மாஞ்சா நூல் அறுத்து பெண் என்ஜினீயர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். இதுக்குறித்து பள்ளி மாணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிடவும், மாஞ்சா நூல் விற்பனைக்கும் ஏற்கனவே சென்னை போலீசார் தடைவிதித்துள்ளனர். இருப்பினும் பல்வேறு இடங்களில் மாஞ்சா நூல் தயாரித்து விற்கும் வேலையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாஞ்சா நூல் காற்றாடி விடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த இவாஞ்சலின் (வயது 23) என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் தனது நண்பர் அஜய் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோயம்பேடு மேம்பாலத்தில் அரும்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக அறுந்து வந்த மாஞ்சா நூல் 2 பேரின் கழுத்திலும் சிக்கி அறுத்தது. இதில் நிலை தடுமாறிய இவாஞ்சலின், அஜய் ஆகியோர் மோட்டார் சைக்கிளோடு கிழே விழுந்தனர். இதில் அவர்கள் இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் மாஞ்சா நூல் மூலம் பட்டம் பறக்கவிட்டு காயம் ஏற்படுத்திய கோயம்பேடு பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவனை கைது செய்து மாஞ்சா நூல் எங்கிருந்து வாங்கினார் என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்