< Back
மாநில செய்திகள்
ஏரியில் மூழ்கி வாலிபர் உள்பட 2 பேர் பலி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

ஏரியில் மூழ்கி வாலிபர் உள்பட 2 பேர் பலி

தினத்தந்தி
|
14 July 2022 10:31 PM IST

வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் ஏரியில் மூழ்கி வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்

ரிஷிவந்தியம்

வாலிபர்

ரிஷிவந்தியம் அருகே உள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மாது மகன் அருண்(வயது 19). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் ரிஷிவந்தியம் பெரிய ஏரியில் குளித்தபோது திடீரென அவரை காணவில்லை என உடன் வந்தவர்கள் ரிஷிவந்தியம் போலீஸ் நிலைத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் தியாகதுருகம் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஏரியில் இறங்கி மாயமான அருணை நள்ளிரவு 12 மணி வரை தேடினர். ஆனால் அவரை காணவில்லை. பின்னர் நேற்று காலை 7 மணியில் இருந்து மீண்டும் தேடும் பணி தொடங்கியது. இதில் தீயணைப்புவீரர்களுடன் சேர்ந்து கிராமமக்களும் தேடினர். காலை 11 மணியளவில் இறந்த நிலையில் அருணின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பனமலைஏரி

விழுப்புரம் அருகே உள்ள சங்கீதமங்கலம் என்ற ஊரை சேர்ந்தவர் யுவராஜ் என்கிற உதயகுமார்(வயது 40). இவர் தனது குடும்பத்துடன் அனந்தபுரத்தில் வசித்து வந்தாராம். நேற்று முன்தினம் மாலை யுவராஜ் துணி துவைக்க பனமலை ஏரிக்கு சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மகன் சந்திரகுப்தன் ஏரியில் சென்று பார்த்த போது யுவராஜ் பிணமாக மிதந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் அனந்தபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று யுவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்