< Back
மாநில செய்திகள்
விபத்தில் பெண் போலீஸ் உள்பட 2 பேர் படுகாயம்
விருதுநகர்
மாநில செய்திகள்

விபத்தில் பெண் போலீஸ் உள்பட 2 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
7 Oct 2023 12:36 AM IST

விபத்தில் பெண் போலீஸ் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.


சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் சத்யா (வயது 37). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் மீனம்பட்டியில் உள்ள தனது வீட்டில் இருந்து சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மீனம்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த பாஸ்கர் (47) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், பெண் போலீஸ் சத்யா மீது மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து சத்யா சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சத்யா சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் பாஸ்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்