< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே இருவேறு விபத்துகளில் 2 பேர் சாவு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே இருவேறு விபத்துகளில் 2 பேர் சாவு

தினத்தந்தி
|
9 July 2023 2:52 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே இருவேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அடுத்த கொளத்துார் கிராமத்தை சேர்ந்தவர் செங்கல்வராயன் (வயது 70). இவர் மோட்டார் சைக்கிளில் கடப்பாக்கம் சென்று விட்டு வீடு திரும்பினார். வெண்ணாங்குப்பட்டு கிராமத்தில் உள்ள அரிசி ஆலை அருகே சென்றபோது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், செங்கல்வராயனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது,

சாவு

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை செய்யூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் செங்கல்வராயன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் படுகாயத்துடன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மற்றொரு விபத்து

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா மேல்நெல்லி கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 31). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அசோக்குமார் மோட்டார் சைக்கிளில் உத்திரமேரூர் ஒன்றியம் பெருநகர் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதினார். இதில் பலத்த காயமடைந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்