ராணிப்பேட்டை
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலி
|வெவ்வேறு சம்பவங்களில் ஓடும் ரெயிலில் இருந்து 2 பேர் தவறி விழுந்து இறந்தனர்.
வெவ்வேறு சம்பவங்களில் ஓடும் ரெயிலில் இருந்து 2 பேர் தவறி விழுந்து இறந்தனர்.
பீகார் வாலிபர்
பீகார் மாநிலம் தூப்நகரை சேர்ந்தவர் ராகேஷ்குமார். (வயது 26). இவர் பீகார் மாநிலம் சப்ராவில் இருந்து அண்ணன் நிரஞ்சன், நண்பர் புதாய் மியா ஆகியோருடன் சென்னை வரை பயணம் செய்தார்.
பின்னர் சென்னையில் இருந்து கடந்த 7-ம் தேதி கேரள மாநிலம் ஆலுவாவுக்கு ரெயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். ரெயில் காட்பாடியை ேநாக்கி வந்து கொண்டிருந்தது.
முகுந்தராயபுரத்தை கடந்து திருவலம் நோக்கி வந்தபோது ராகேஷ்குமார் தவறி கீழே விழுந்தார்.
இந்த சம்பவம் குறித்து காட்பாடி ரெயில்வே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மனோகர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மற்றொரு சம்பவம்
பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் ரெயிலில் கடந்த 7-ந் தேதி 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பயணம் செய்தார்.
அந்த ரெயல் காட்பாடியை கடந்து வாலாஜா ரெயில் நிலையத்திற்கும் தலங்கை ரெயில் நிலையத்திற்கும் இடையே சென்று கொண்டிருந்தபோது ஒருவர் தவறி கீழே விழுந்தார். அவருடைய உடல் இரண்டு துண்டாகி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து காட்பாடி ரெயில்வே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
==========