< Back
மாநில செய்திகள்
சூளகிரி, காவேரிப்பட்டணம் பகுதிகளில் இருவேறு விபத்துகள்:வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் பலி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

சூளகிரி, காவேரிப்பட்டணம் பகுதிகளில் இருவேறு விபத்துகள்:வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் பலி

தினத்தந்தி
|
15 Jun 2023 12:15 AM IST

காவேரிப்பட்டணம்

வடமாநில தொழிலாளி

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சுந்தர்லால் (வயது 58), தொழிலாளி. இவர் வேலைக்காக காவேரிப்பட்டணத்துக்கு கடந்த 8-ந் தேதி வந்திருந்தார். இந்த நிலையில் காவேரிப்பட்டணம்-பாலக்கோடு சாலையில் கல்குட்டப்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக சுந்தர்லால் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு விபத்து

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெடாய் மொச்சி (65). இவர் சூளகிரி அருகே கொல்லப்பள்ளி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 11-ந் தேதி இரவு இவர் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கொல்லப்பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஜெடாய் மொச்சியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்