< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை
|7 Dec 2022 1:36 AM IST
வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (வயது 53), வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த வெங்கடாஜலபதி மனம் உடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதேபோல் சேலம் மெய்யனூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி ரமேஷ் (27) என்பவரும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.