< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
மின் வயர் திருடிய 2 பேர் சிக்கினர்
|25 Sept 2022 8:03 PM IST
தேவதானப்பட்டி அருகே மின்வயரை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள நாகம்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி. விவசாயி. இவரது தோட்டத்தில் இருந்த மின்வயர்கள் திருடுபோனது. இதுகுறித்து அவர் தேவதானப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சில்வார்பட்டி தெற்கு காலனியை சேர்ந்த கதிர்வேல் (வயது 45), அழகுவேல் (50) ஆகியோர் மின் வயர்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.