< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்

தினத்தந்தி
|
10 May 2023 12:15 AM IST

கள்ளக்குறிச்சி அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தியாகதுருகம்,

கள்ளக்குறிச்சி அருகே வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் விருகாவூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பெருமாள் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.. விசாரணையில் அவர்கள் விருகாவூர் கிராமத்தை சேர்ந்த சூர்யா (வயது 20), சுபாஷ் (20) ஆகியோர் என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 130 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்