< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற 2 ேபர் சிக்கினர்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற 2 ேபர் சிக்கினர்

தினத்தந்தி
|
5 March 2023 6:45 PM GMT

பழனியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பழனி ராமநாதநகர் பகுதியில் அடிவாரம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் பிடித்தனர். அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர், மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்த பிரகதீஷ் (வயது 27) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதேபோல் ஆயக்குடி பொன்னிமலை சித்தர் கரடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த காமராஜ் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்