< Back
மாநில செய்திகள்
கஞ்சா செடிகள் வளர்த்த பெண் உள்பட 2 பேர் கைது
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

கஞ்சா செடிகள் வளர்த்த பெண் உள்பட 2 பேர் கைது

தினத்தந்தி
|
25 Sept 2022 8:11 PM IST

ஜமுனாமரத்தூரில் கஞ்சா செடிகள் வளர்த்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


ஜமுனாமரத்தூர் மலை கிராமங்களில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் தலைமையில் ஜமுனாமரத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது ஜமுனாமரத்தூர் தாலுகா மேல்தட்டியப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுசிலா (வயது 45) என்பவர் அவருக்கு சொந்தமான நிலத்தில் கஞ்சா செடிகள் வளர்ப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரது நிலத்தில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (55) என்பவரும் அவருக்கு சொந்தமான நிலத்தில் கஞ்சா செடிகள் வளர்த்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவரையும் போலீசார் கைது செய்து அவரது நிலத்தில் உள்ள கஞ்சா செடியையும் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் இருந்து சுமார் 80 கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்