< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது

தினத்தந்தி
|
14 Oct 2022 12:49 AM IST

கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வின் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது குறிச்சி பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டு இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் வீரமாணிக்கபுரம் அம்மன்கோவில் தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் மந்திரமூர்த்தி (வயது 25) மற்றும் 18 வயது சிறுவன் என்பதும், அவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டு இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்து, 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்