< Back
மாநில செய்திகள்
பெண் வியாபாரி கொலை வழக்கில் 2 பேர் கைது
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

பெண் வியாபாரி கொலை வழக்கில் 2 பேர் கைது

தினத்தந்தி
|
3 Jan 2023 10:28 PM IST

செய்யாறில் மது விற்ற பெண் வியாபாரி கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

செய்யாறு

செய்யாறில் மது விற்ற பெண் வியாபாரி கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கார் மோதி பலி

செய்யாறு டவுன் வெங்கட்ராயன்பேட்டை சேட் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45), நெசவு தொழிலாளி,

இவரது மனைவி விஜயலட்சுமி (39). இவர் டாஸ்மாக் மதுபாட்டில்களை வாங்கி வைத்து வீட்டில் விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் மொபட்டில் செய்யாறு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த கார் மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் விஜயலட்சுமி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதனிடையே விபத்து ஏற்படுத்திய காரை வைத்தியர் தெருவில் மடக்கியபோது காரில் இருந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பிச் சென்று விட்டனர். பின்னர் காரை செய்யாறு போலீசார் பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து முருகன் போலீசில் புகார் அளித்தார். அதில் செய்யாறு கிடங்கு தெருவை சேர்ந்த பிரபு, கொடநகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்ற மாரி ஆகியோர் மது விற்கும் தொழில் போட்டி காரணமாக எனது மனைவியை கார் ஏற்றி கொலை செய்து உள்ளனர் என கூறியுள்ளார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் பிரபு, வெங்கடேசன் என்ற மாரி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்