< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
சூளை, சிந்தாதிரிப்பேட்டையில் கஞ்சா வேட்டையில் 2 பேர் கைது - மே தின பூங்காவில் விற்பனை அமோகம்
|14 March 2023 12:38 PM IST
சூளை, சிந்தாதிரிப்பேட்டையில் கஞ்சா வேட்டையில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் தினமும் போலீசார் கஞ்சா வேட்டை நடத்தி வருகிறார்கள். சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை அமோகமாக நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாறு வேடத்தில் போலீசார் கண்காணித்தபோது, 1.3 கிலோ கஞ்சா பொட்டலங்களுடன் மோகன் (வயது 59) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 23 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதேபோல சென்னை சூளை ரவுண்டானா பகுதியில் 5 கிலோ கஞ்சா பொட்டலங்களுடன், துரைராஜ் (24) என்பவரும் கைதானார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச்சேர்ந்த இவர், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்துள்ளார்.