< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
|1 July 2023 7:22 PM IST
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தண்டராம்பட்டு தாலுகா தென்கரும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிபிரதாப் (வயது 44).
இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தையிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் மேல்செட்டிப்பட்டு கிராமத்தை சேர்ந்த கண்ணன் (36) என்பவரை தண்டராம்பட்டு போலீசார் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கலெக்டர் முருகேசுக்கு பாிந்துரை செய்தார்.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அந்தோணிபிரதாப் மற்றும் கண்ணன் ஆகியோரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.