< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
|6 Nov 2022 1:00 AM IST
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மேட்டு மஜித் தெருவை சேர்ந்தவர் முகமது சிராஜ் (வயது 22). கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 23). இவர்கள் இருவரும் கடந்த மாதம் திருச்சி மெயின் ரோட்டில் நடந்து சென்ற குகையை சேர்ந்த செல்வமுருகன் என்பவரை வழிமறித்து கத்திமுனையில் செல்போனை பறித்து சென்றனர். இதுதொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது சிராஜ், யுவராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர்கள் இருவரும் தொடர்ந்து வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதை பரிசீலித்து முகமது சிராஜ், யுவராஜ் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.