< Back
மாநில செய்திகள்
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

தினத்தந்தி
|
20 Oct 2023 3:02 AM IST

தஞ்சை அருகே குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பல்வேறு வழக்குகள்

தஞ்சையை அடுத்த வண்ணாரப்பேட்டை கழவாரித்தெருவை சேர்ந்தவர் காட்டுராஜா (வயது 52). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.இதேபோல் தஞ்சை அருகே பூதலூர் தாலுகா திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலையை சேர்ந்தவர் நாகராஜன் மகன் பாரதி என்ற பாரதிராஜா(26). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

இதை தொடர்ந்து காட்டுராஜா மற்றும் பாரதி ராஜாவையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், கலெக்டர் தீபக்ஜேக்கப்புக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, குண்டர் சட்டத்தில் காட்டுராஜாவைவும், திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், குண்டர் சட்டத்தில் பாரதிராஜாவை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்