மயிலாடுதுறை
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
|கொள்ளிடம் அருகே குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே கடவாசல் கிராமம் காந்தி நகரைச் சேர்ந்த கன்னிகோயில் தெருவில் கடந்த மே மாதம் 20-ந் தேதி கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவின் போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இரண்டு தெருக்களை சேர்ந்த வாலிபர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த அக்டோபர் மாதம் 11-ந்தேதி 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் இதே வழக்கில் தொடர்புடைய கடவாசல் காந்தி நகரைச் சேர்ந்த மோகன் மகன் நரேஷ் (வயது 25) மற்றும் வடகால் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் மணிகண்டன்(25) ஆகிய இருவரையும் புதுப்பட்டினம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் குருமூர்த்தி மற்றும் வாஞ்சிநாதன் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து நரேசை திருச்சி மத்திய சிறையிலும், மணிகண்டனை புதுக்கோட்டை சிறையிலும் குண்டர் சட்டத்தில் ஒரு வருட சிறை தண்டனை அனுபவிக்கும் பொருட்டு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.