< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
|26 July 2023 12:15 AM IST
ஆரல்வாய்மொழியில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
நாகா்கோவில்,
ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகரை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 62). அந்த பகுதியில் செங்கல்சூளை நடத்தி வந்தார். இவரை சம்பவத்தன்று 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது. இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பு என்ற அன்பழகன் (36), விஜயன் (35) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திலும் கொலை வழக்கு உள்ளது. இவர்கள் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதற்கான அனுமதி கோரி கலெக்டர் ஸ்ரீதருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிந்துரை செய்தார். இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து 2 பேரையும் ஆரல்வாய்மொழி போலீசார் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.