< Back
மாநில செய்திகள்
ரூ.10 கோடி நிலத்தை விற்க முயன்ற 2 பேர் கைது
சேலம்
மாநில செய்திகள்

ரூ.10 கோடி நிலத்தை விற்க முயன்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
17 Sept 2023 1:51 AM IST

தொழில் அதிபர் இறந்து விட்டதாக சான்றிதழ் கொடுத்து ரூ.10 கோடி நிலத்தை விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் சுவர்ணாம்பிகை நகரை சேர்ந்தவர் அஜய்குமார் (வயது 49). தொழில் அதிபரான இவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலனிடம் ஒரு புகார் மனுவை அளித்தார். அதில், எனக்கு ஓமலூர் அருகே சிக்கனம்பட்டி கிராமத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. ரூ.10 கோடி மதிப்புள்ள அந்த நிலத்தை நான் இறந்துவிட்டதாகவும், எனக்கு 2 மகள்கள் இருப்பதாகவும் போலி சான்றிதழ் தயாரித்து சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே, போலி சான்றிதழ் தயாரித்து சொத்தை விற்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகார் மனு மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஓமலூர் பெரியஏரிப்பட்டி வகுத்தானூரை சேர்ந்த தம்பிதுரை, பொம்மியம்பட்டி சுண்டக்காபட்டியை சேர்ந்த நல்லதம்பி ஆகியோர் அஜய்குமார் இறந்துவிட்டதாக போலியான சான்றிதழை தயாரித்து நிலத்தை விற்க முயன்றது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்