கன்னியாகுமரி
மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது
|கன்னியாகுமரி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது
கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டு வந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சுந்தர் மூர்த்தி ஆகியோர் கன்னியாகுமரி பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தி விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சேரன்மகாதேவியை அடுத்த பேட்டையைச் சேர்ந்த துரைராஜ் மகன் மகாராஜா (வயது 21) மற்றும் ஸ்ரீவைகுண்டம் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் மகன் முத்துராஜ் (23) என்பதும், இவர்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 7 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.