தேனி
ஆண்டிப்பட்டி அருகே கோவிலில் உண்டியலை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
|ஆண்டிப்பட்டி அருகே கோவிலில் உண்டியலை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். செய்யப்பட்டனர்.
ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் கதர் காலனியில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே ஊரை சேர்ந்த காமாட்சி என்பவர் பூசாரியாக உள்ளார். இந்தநிலையில் கடந்த 10-ந்தேதி இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு, காமாட்சி கோவிலை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் மறுநாள் காலை அவர் கோவிலுக்கு சென்று பார்த்தபோது, கோவிலின் முன்பக்க இரும்பு கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.
மேலும் கோவிலில் இருந்த உண்டியலை காணவில்லை. மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காமாட்சி ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தினர். அதில், டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த திருப்பதி மகன் விக்னேஷ்குமார் (வயது 29), கொண்டமநாக்கன்பட்டியை சேர்ந்த செல்வராஜ் மகன் கமலேஷ் (21) ஆகியோர் கோவிலில் உண்டியலை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.