< Back
மாநில செய்திகள்
வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது
தேனி
மாநில செய்திகள்

வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

தினத்தந்தி
|
7 Sept 2022 11:15 PM IST

கம்பத்தில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கம்பம் செக்கடி தெருவை சேர்ந்தவர் முகமதுராஜித் (வயது 23). கடந்த 5-ந்தேதி இவர், கம்பம் ஐசக்போதகர் தெருவில் உள்ள உடற்பயிற்சி கூடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் முகமது ராஜித்தை மிரட்டி அவரது செல்போன் மற்றும் வெள்ளி மோதிரம், வெள்ளி சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் முகமது ராஜித் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் தலைமையிலான போலீசார், மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை கம்பம் புதிய பஸ்நிலையம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் 2 பேர் சுற்றித்திரிந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்த சிவனேசன் (21), செல்லாண்டியம்மன்கோவில் தெருவை சேர்ந்த ரிஷி (25) என்று தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் சேர்ந்து முகமது ராஜித்திடம் செல்போன், வெள்ளி மோதிரம், வெள்ளி சங்கிலியை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்