< Back
மாநில செய்திகள்
சின்னசேலம் அருகேஇரும்பு பொருட்கள் திருடிய 2 பேர் கைதுஉடந்தையாக இருந்த வியாபாரியும் சிக்கினார்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சின்னசேலம் அருகேஇரும்பு பொருட்கள் திருடிய 2 பேர் கைதுஉடந்தையாக இருந்த வியாபாரியும் சிக்கினார்

தினத்தந்தி
|
12 Aug 2023 12:15 AM IST

சின்னசேலம் அருகே இரும்பு பொருட்கள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சின்னசேலம்,

சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், கார்த்திக் உள்ளிட்ட போலீசார் நேற்று சின்னசேலம்-நாககுப்பம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினிலாரியை தடுத்து நிறுத்தி, அதில் வந்த 2 பேரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், இந்திலியை சேர்ந்த செல்வம் மகன் அஜய் என்கிற அஜித் (வயது 25), தொட்டியம் நடுத்தெருவை சேர்ந்த சடையன் மகன் கருவாடு என்கிற சுரேஷ் (37) ஆகியோர் என்பதும், இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த மாதம் 8-ம் தேதி சின்னசேலம் அடுத்த நமச்சிவாயபுரம் மேற்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் புதிதாக வீடு கட்டும் இடத்தில் இருந்து சென்ட்ரிங் அமைக்க பயன்படுத்தப்படும் 73 இரும்பு ஷீட்டுகள் உள்ளிட்ட இரும்பு பொருட்களை திருடி மினி லாரி மூலம் ஏற்றி சென்று கனியாமூரில் உள்ள மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அஜித், சுரேஷ், கரடிசித்தூரை சேர்ந்த மாணிக்கம்(50) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் திருடப்பட்ட இரும்பு பொருட்களை போலீசார் மீட்டதுடன், அதனை திருடி எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட மினிலாரியையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்